ராபர்ட் என். ஃப்ராங்க்ளின் (ROBERT N. FRANKLIN)

வழக்கறிஞர்
நிபுணத்துவம்
கண்ணோட்டம்

ராபர்ட் அவர்கள் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் படித்து ஓஸ்கூட் ஹால் லா ஸ்கூலில் (Osgoode Hall Law School) 1988 ல் பட்டம் பெற்றார். 1990ல் வழக்கறிஞர் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். முதன்மையாக அவர் மோட்டார் வாகன மற்றும் வழுக்கி விழும் விபத்துக்களில் காப்பீட்டு நிறுவனங்களிடம் நஷ்ட ஈட்டுத் தொகைகள் கோரப்பட்ட வழக்குகளில் காயமுற்ற நபர்களின் பிரதிநிதியாக தனிநபர் காய வழக்குகளைக் கையாண்டார். ராபர்ட் அவர்கள், மேல் கனடாவின் சட்ட சங்கம் (Law Society of Upper Canada), ஒன்டாரியோ நீதி விசாரணை வழக்கறிஞர்கள் கழகம் (Ontario Trial Lawyers’ Association), வழக்கறிஞர்கள் சங்கம் (Advocates’ Society) மற்றும் ஒன்டாரியோ வழக்கறிஞர்கள் கழகத்தின் (Ontario Bar Association) ஒரு சிறந்த உறுப்பினர் ஆவார். ராபர்ட் அவர்கள், உச்ச நீதிமன்றம் (ஸுபீரியர் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்), மண்டல நீதி மன்றம் (டிவிஷனல் கோர்ட்) மற்றும் மேல் முறையீடு வழக்கு மன்றம் (கோர்ட் ஆஃப் அப்பீல்) மட்டுமல்லாது, ஒன்டாரியோவின் Financial Services Commission (நிதி சேவைகள் ஆணையம்), அதன் மேல் முறையீட்டுப் பிரிவு மற்றும் கனடிய ஓய்வூதியத்திட்ட (CPP) மேல் முறையீடு மறுபரிசீலனை தீர்ப்பு மன்றம் ஆகியவற்றில் நடந்த வழக்கு விசாரணைகளில் வெற்றி பெற்றவர். தன் தொழிலுக்கு அப்பாற்பட்டு, ராபர்ட் அவர்கள் இதுநாள் வரையில் நியூயார்க், ஒட்டாவா, டொரான்டோ மற்றும் மிஸ்ஸிஸாகாவில் நடந்த நான்கு நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களிலும், பல்வேறு தூரங்களில் நடந்த மற்ற போட்டிகளிலும் பங்கெடுத்துச் சாதனை புரிந்த ஒரு ஓட்டப் பந்தய வீரராவார்.

மேலும் படிக்க

ரவி நடராஜா (Ravi Nadarajah)

உரிமம் பெற்ற சட்டத்துறை
நிபுணத்துவம்
கண்ணோட்டம்

ரவி அவர்கள் கடந்த 22 ஆண்டுகளாக காப்புறுதி கோரல்கள் துறையில் ஈடுபட்டு வருகிறார். உரிமம் பெற்ற சட்ட உதவியாளராக ஆவதற்கு முன், அவர் கோ-ஆபரேட்டர்ஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 1989 முதல் 1994 வரை விபத்து உதவிப்படிகள் கோரல்களை முறைப்படுத்துநராகப் (அட்ஜஸ்டர்) பணி புரிந்தார். அது முதல், ரவி அவர்கள் ஒரு உரிமம் பெற்ற சட்ட உதவியாளராக, ஒன்டாரியோவின் Financial Services Commission–யில் (நிதி சேவைகள் ஆணையம்) தலையீடு மற்றும் மத்யஸ்த செயல்முறைகள் உள்பட, காயமடைந்த பாதிக்கப்பட்டோர்களின் சார்பாக அவர்களின் மோட்டார் வாகன விபத்துக் காப்புறுதிக் கோரல்கள் மற்றும் வழுக்கி விழுந்த விபத்துக் கோரல்களை ஏற்று நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க

ேடவிட் கர்ரன்ஸா (David Carranza

உரிமம் பெற்ற சட்டத்துறை
நிபுணத்துவம்
கண்ணோட்டம்

டேவிட் அவர்கள் 1995ல் தனிநபர் காயம் தொடர்பான துறையில் நுழைந்தது முதல், விபத்து உதவிப்படிகளைக் கோரும் வழக்குகளில் வல்லுனராகி பரந்த அனுபவத்தை பெற்றுள்ளார். ஒரு உரிமம் பெற்ற சட்ட உதவியாளரும் மேல் கனடாவின் சட்ட சங்கத்தின் ஒரு உறுப்பினருமாகிய (Law Society of Upper Canada) டேவிட் அவர்களின் தீவிர ஆர்வம் அவருடைய வாடிக்கையாளர்கள் காயமடையும் வேளையில் எதிர்நோக்கும் சவால்களால் உத்வேகமளிக்கப்படுகிறது, மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக அதிகபட்ச உதவிப்படிகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அவர் மிகக் கடுமையாக முயற்சி செய்கிறார். இதனுடன், டேவிட் அவர்கள் தலையீடு மற்றும் மத்யஸ்த சேவைகளிலும் ஒன்டாரியோவின் Financial Services Commission-யிலும் (நிதி சேவைகள் ஆணையம்) அவருடைய வாடிக்கையாளர்கள் சார்பாக வழக்காடுகிறார். தன்னுடைய அறிவை தன் துறையிலுள்ள சக ஊழியர்கள் மற்றும் பேரார்வம் உள்ள தொழில் நெறிஞர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறார். மேலும், அவர் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றுவதன் மூலம், தனது தொழிலின் மிகச் சிறந்த நடைமுறைகள் குறித்த அறிவை உயர் மட்டத்தில் பராமரிக்கிறார். டேவிட் அவர்களும் ஓட்டப்பந்தயங்களில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். தன் பயனுள்ள நேரத்தை தன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கழிப்பதில் மகிழ்கிறார்.

மேலும் படிக்க